ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கோவா அணி வெற்றி


ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கோவா அணி வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

கோவாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - எப்.சி. கோவா அணிகள் மோதின.

கோவா,

12 அணிகளுக்கு இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் இன்று கோவாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - எப்.சி. கோவா அணிகள் மோதின.

இந்த போட்டியில் எப்.சி. கோவா அணி சார்பில், நோவா ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்ட நேர முடிவில் எப்.சி. கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story