ஐ.எஸ்.எல். கால்பந்து: 2-வது அரைஇறுதியில் ஐதராபாத்-மோகன் பகான் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: 2-வது அரைஇறுதியில் ஐதராபாத்-மோகன் பகான் இன்று மோதல்
x

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதியில் ஐதராபாத்-மோகன் பகான் இன்று மோதுகின்றன.

ஐதராபாத்,

11 அணிகள் பங்கேற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த போட்டியில் ஒவ்வொரு அரைஇறுதி போட்டியும் இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும். இதில் அதிக வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஐதராபாத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 2-வது அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணி, முன்னாள் சாம்பியனான ஏ.டி.கே.மோகன் பகானை சந்திக்கிறது.

ஐதராபாத் அணி லீக் சுற்று முடிவில் 2-வது இடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. லீக் சுற்றில் 3-வது இடம் பெற்ற ஏ.டி.கே.மோகன் பகான் அணி வெளியேற்றுதல் சுற்றில் ஒடிசாவை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

இந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்த இரண்டு லீக் ஆட்டங்களில் தலா ஒரு வெற்றியை ருசித்து இருக்கின்றன. தடுப்பு ஆட்டத்தில் சிறந்து விளங்கும் இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story