ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

கவுகாத்தியில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

கவுகாத்தி,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் மும்பையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை சிட்டி-ஐதராபாத் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தொடர்ந்து கவுகாத்தியில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ரித்விக் தாஸ் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். டேனியல் சைமா ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story