ஐ.எஸ்.எல் கால்பந்து: முகமைதன் அணியை வீழ்த்தி நார்த்ஈஸ்ட் யுனைடெட் திரில் வெற்றி

image courtesy: twitter/@NEUtdFC
நார்த்ஈஸ்ட் யுடைடெட் தரப்பில் அஜராய் ஒரு கோல் அடித்தார்.
கொல்கத்தா,
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முகமைதன் எப்.சி.- நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணிகளாலும் வழக்கமான நேரத்தில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் டிரா ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காயம் உள்ளிட்ட நேர விரயத்துக்காக ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் நார்த்ஈஸ்ட் ஒரு கோல் அடித்து திரில் வெற்றியை ருசித்தது. அந்த அணி வீரர் அலாடினே அஜராய் கோல் அடித்து தங்கள் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற காரனமாய் அமைந்தார்.
Related Tags :
Next Story






