ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் அணிகள் மோதின.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மோகன் பகான் அணி சார்பில், ஜேசன் கம்மிங்ஸ் ஆட்டத்தின் 27-வது நிமிடத்திலும் லிஸ்டன் 36-வது நிமிடத்திலும் திமித்ரி 45+3-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் சவுல் கிரெஸ்போ ஆட்டத்தின் 53-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story