ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின.

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் மோகன் பகான் அணி சார்பில் திமித்ரி பெட்ராடோஸ் ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பஞ்சாப் எப்.சி. அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story