ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி - பெங்களூரு எப்.சி. அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி - பெங்களூரு எப்.சி. அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம் 

மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி - பெங்களூரு எப்.சி. அணிகள் மோத உள்ளன.

மும்பை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி - பெங்களூரு எப்.சி. அணிகள் மோத உள்ளன.

மும்பை சிட்டி அணி 13 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 15 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி 6 டிரா 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.


Next Story