ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

மும்பை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், மும்பை சிட்டி அணி சார்பில் ஜார்ஜ் பெரேரா ஆட்டத்தின் 22-வது நிமிடத்திலும், லல்லியன்சுவாலா சாங்டே 61-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணி சார்பில் தியாகோ ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story