ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம்

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கோவா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கோவாவில் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கோவா எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் கோவா அணி 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 டிரா, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 15 ஆட்டங்களில் ஆடியுள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 3 வெற்றி, 7 டிரா, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story