ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் எப்.சி - மும்பை சிட்டி எப்.சி அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் எப்.சி - மும்பை சிட்டி எப்.சி அணிகள் இன்று மோதல்
x

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி - மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஐதராபாத் 19 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 5 டிரா, 13 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

அதேவேளையில் மும்பை அணி 19 ஆட்டங்களில் ஆடி 12 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி கண்டு 41 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story