ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: மும்பை சிட்டி அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: மும்பை சிட்டி அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

மும்பை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை சிட்டி அணி சார்பில் ஜோஸ் லூயிஸ் ஆட்டத்தின் 14-வது நிமிடத்திலும் அல்பெர்ட்டோ 32-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் இம்ரான் கான் ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஜெரெமி ஆட்டத்தின் 59-வது நிமிடத்திலும் 87-வது நிமிடத்திலும் என இரண்டு கோல்கள் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story