ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @IndSuperLeague

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றதை முன்னிட்டு கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல் நேற்று வரை ஐ.எஸ்.எல்.தொடர் நடைபெறவில்லை.

இந்நிலையில் கலிங்கா சூப்பர் கோப்பை தொடர் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் ஐ.எஸ்.எல் தொடர் நடைபெற உள்ளது. இதையடுத்து ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story