ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ்
x

Image Courtesy: @IndSuperLeague

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கொச்சி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - கோவா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் கோவா அணி 2 கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் கேரளா அணி அடுத்தடுத்து 4 கோல்களை அடித்து கோவா அணிக்கு அதிர்ச்சி அளித்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் கேரளா அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


Next Story