ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி அபார வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்;   நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி அபார வெற்றி
x

Image Courtesy: @VikramPartap06 / @MumbaiCityFC

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் மகாராஷ்டிராவில் உள்ள மும்பை கால்பந்து அரங்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

இதில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி 4-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


Next Story