ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மோகன் பகான் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மோகன் பகான் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி..!
x

Image Courtesy: @IndSuperLeague

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோகன் பகான் - மும்பை அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. இதையடுத்து முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களது ஆட்டத்தை தீவிரப்படுத்தின. இதில் மும்பை அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.


Next Story