ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி
x

image courtesy: Odisha FC twitter

புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

புவனேஸ்வர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் திமித்ரியோஸ் ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஒடிசா எப்.சி அணி சார்பில் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 53-வது மற்றும் 57-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஒடிசா எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story