ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பஞ்சாப் எப்.சி - மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பஞ்சாப் எப்.சி - மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம்

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன.

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன

அதில் மாலை 5.00 மணிக்கு புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - மும்பை சிட்டி அணிகள் மோத உள்ளன.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன.


Next Story