ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பஞ்சாப் எப்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பஞ்சாப் எப்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்
x

image courtesy: Punjab FC twitter

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன.

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன.

ஜாம்ஷெட்பூர் அணி 15 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 டிரா, 7 தோல்வி என புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் எப்.சி அணி 14 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 டிரா, 6 தோல்வி என புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.


Next Story