ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று ஓய்வு நாள்

கோப்புப்படம்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரள அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
கொச்சி,
11 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கொச்சியில் அரங்கேறிய ஆட்டம் ஒன்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
86-வது நிமிடத்தில் கேரள வீரர் சந்தீப் கோல் அடித்தார். இதன் மூலம் 7 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி என்று 22 புள்ளிகளுடன் கேரள அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





