அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்தார் மெஸ்ஸி - வெளியான அறிவிப்பு


அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்தார் மெஸ்ஸி - வெளியான அறிவிப்பு
x

Image Courtesy : Inter Miami CFTwitter 

மெஸ்ஸி தங்கள் அணியில் இணைந்ததை இன்டர் மியாமி கிளப் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா,

கால்பந்து உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அனிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார் .பிஎஸ்ஜி அணியுடன் எற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த அணியில் இருந்து விலகினார்.

இதனால் அவர், எந்த அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உலக கால்பந்து ரசிகர்களிடையே எழுந்தது. . இந்த சூழலில் இன்டர் மியாமி அணியை தேர்வு செய்தார் மெஸ்ஸி. அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக அவர் விளையாட உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணியில் மெஸ்ஸி இணைந்துள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி தங்கள் அணியில் இணைந்ததை இன்டர் மியாமி கிளப் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

மேஜர் லீக் போட்டியில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இண்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி களம் இறங்க உள்ளார்.


Related Tags :
Next Story