தனது மேஜிக்கால் அசத்தலான ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி..! வீடியோ


தனது மேஜிக்கால் அசத்தலான ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி..! வீடியோ
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 29 March 2023 9:01 AM GMT (Updated: 29 March 2023 9:03 AM GMT)

ஆட்ட நேர முடிவில் 7-0 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது

கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து அர்ஜென்டினா அணி சாம்பியன் ஆனது 1978, 1986-க்குப் பிறகு அர்ஜென்டினா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது.மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது

அர்ஜென்டினா அணி அதற்கு பிந்தைய போட்டிகளிலும் `சாம்பியன்` என்ற அந்தஸ்துடன் உற்சாகமாக விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இன்று அர்ஜென்டினா- குராக்கோ அணிகள் இடையே சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி நடந்தது. இதில் தனது மேஜிக்கால் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

20வது நிமிடத்தில் கோல் அடித்தபோது மெஸ்ஸி ,அர்ஜென்டினா அணிக்காக 100 கோல்கள் அடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.இதனை தொடர்ந்து 33 , 37 வது நிமிடங்களில் தனது மேஜிக்கால் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்டுத்தினார்.இதனால் ஆட்ட நேர முடிவில் 7-0 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது.Related Tags :
Next Story