உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப் அணியை வாங்குகிறார் முகேஷ் அம்பானி ?


உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப் அணியை வாங்குகிறார் முகேஷ் அம்பானி ?
x
தினத்தந்தி 13 Nov 2022 6:11 PM IST (Updated: 13 Nov 2022 6:12 PM IST)
t-max-icont-min-icon

உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் இறங்கியுள்ளதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி.இவர் தற்போது இங்கிலாந்தின் ,உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப் அணியான லிவர்புல் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் இறங்கியுள்ளதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

லிவர்புல் அணியின் தற்போதைய உரிமையாளரான பென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் (FSG), அணியை விற்க முன்வந்துள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், அவர்கள் லிவர்பூல் அணியை வாங்கியுள்ளனர்.

தற்போது, அணியை 4 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுக்கு விற்க பென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..லிவர்புல் கிளப்பை வாங்குவதற்கு முகேஷ் அம்பானி ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது/.

1 More update

Next Story