ஐ.எஸ்.எல் கால்பந்து: காயம் காரணமாக மும்பை சிட்டி எப்.சி வீரர் அமே ரணவாடே விலகல்

Image Tweeted By MumbaiCityFC
அமே ரணவாடே காயம் காரணமாக தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
மும்பை,
11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மும்பை அணியின் டிஃபென்டராக உள்ள இந்தியாவை சேர்ந்த அமே ரணவாடே காயம் காரணமாக தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக தங்கள் டுவிட்டர் பக்கத்தில் மும்பை சிட்டி எப்.சி வெளியிட்டுள்ள பதிவில் "டிபென்டர் அமே ரணவாடே முழங்கால் காயத்தால் இந்த ஐ.எஸ்.எல் சீசனின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






