பீலேவின் சாதனையை முறியடித்த நெய்மார்...!


பீலேவின் சாதனையை முறியடித்த நெய்மார்...!
x

Image Courtesy: Instagram@neymarjr

தினத்தந்தி 10 Sep 2023 8:13 AM GMT (Updated: 10 Sep 2023 8:14 AM GMT)

பொலிவியாவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றது.

பிரேசிலியா,

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார். 2010ம் ஆண்டு தன் 18 வயதில் பிரேசில் அணிக்காக அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகம் ஆனார். அறிமுக ஆட்டத்திலேயே கோல் அடித்து தன் கணக்கைத் தொடங்கினார். அப்போதிருந்து இடைவிடாமல் தொடர்ந்து கோல் மழையை பொழிந்து வருகிறார்.

தற்போது, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்துக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டம் ஒன்றில் பிரேசில் மற்றும் பொலிவியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பிரேசில் வீரர் நெய்மார் 2 கோல்கள் அடித்தார். இதன் மூலம், நெடுங்காலமாக நிலைத்திருந்த பீலேவின் 77 கோல் சாதனையை முறியடித்து பிரேசிலின் அதிக கோல்கள் அடித்த வீரராக நெய்மார் மாறியுள்ளார்.

பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த டாப் 5 வீரர்கள் விவரம் பின்வருமாறு;-

1. நெய்மார் - 79 கோல்கள் - 125 போட்டிகள்

2. பீலே - 77 கோல்கள் - 92 போட்டிகள்

3. ரொனால்டோ நசாரியோ - 62 கோல்கள் - 98 போட்டிகள்

4. ரொமாரியோ - 55 கோல்கள் - 70 போட்டிகள்

5. ஜிகோ - 48 கோல்கள் - 71 போட்டிகள்



Next Story