பிரீமியர் லீக் கால்பந்து : லிவர்புல் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி
![பிரீமியர் லீக் கால்பந்து : லிவர்புல் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பிரீமியர் லீக் கால்பந்து : லிவர்புல் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி](https://media.dailythanthi.com/h-upload/2022/08/23/837361-untitled-7.webp)
Image Courtesy : Manchester United Twitter
2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்அணி வெற்றி பெற்றது.
2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.இதில் இன்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்புல் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 16வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் ஜடோன் சான்சோ கோல் அடித்தார்.இதனால் முதல் பாதியில் 1-0 என மான்செஸ்டர் யுனைடெட் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் 53வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் மார்கஸ் ரஷ்போர்ட் கோல் அடித்தார்.பின்னர் லிவர்புல் அணியின் மொகமது சலா 81வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்அணி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story