எதிரணி வீரரை முழங்கையால் இடித்து தள்ளிய ரொனால்டோவுக்கு ரெட் கார்டு...


எதிரணி வீரரை முழங்கையால் இடித்து தள்ளிய ரொனால்டோவுக்கு ரெட் கார்டு...
x

தனது கால்பந்து வாழ்க்கையில் ரொனால்டோ பெற்ற 12-வது ரெட் கார்டு இதுவாகும்

ரியாத்,

சவுதிஅரேபியாவில் உள்ளூர் கிளப்புக்கான சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு அரைஇறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அல்-ஹிலாலிடம் தோற்று இறுதிசுற்று வாய்ப்பை இழந்தது.

86-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோபத்தில் எதிரணி வீரர் அலி அல்புலாஹியை முழங்கையால் இரண்டு முறை நெஞ்சில் பலமாக இடித்து கீழே தள்ளினார். இதையடுத்து நடுவர் அவருக்கு ரெட் கார்டு காண்பித்தார். நேரடியாக ரெட் கார்டு எச்சரிக்கையால் அதிருப்திக்குள்ளான 39 வயதான ரொனால்டோ நடையை கட்டினார். தனது கால்பந்து வாழ்க்கையில் ரொனால்டோ பெற்ற 12-வது ரெட் கார்டு இதுவாகும்


Next Story