சவுதி அரேபியா கால்பந்து லீக் தொடர்; ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தல்


சவுதி அரேபியா கால்பந்து லீக் தொடர்; ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தல்
x

image courtesy; instagram/ cristiano

அல் பதே அணிக்கு எதிரான போட்டியில் அல்-நாசர் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

ரியாத்,

சவுதி அரேபியா கால்பந்து லீக் தொடர் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அல்-நாசர் அணிக்காக போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார்.

இதில் நடந்த போட்டி ஒன்றில் அல்-நாசர் மற்றும் அல் பதே அணிகள் மோதின. இந்த போட்டியில் அல்-நாசர் அணி வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் சக வீரர் கோல் அடிக்க உதவியும் செய்தார். இந்த போட்டியில் அல்-நாசர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story