பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெளியேற்றம்


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெளியேற்றம்
x

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.

மெல்போர்ன்,

32 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் மெல்போர்னில் நேற்று 'எப்' பிரிவில் நடந்த பிரேசில்-ஜமைக்கா அணிகள் இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் 6-3 என்ற கோல் கணக்கில் பனாமாவை பந்தாடியது.

'எப்' பிரிவில் பிரான்ஸ் 7 புள்ளியுடன் (2 வெற்றி, ஒரு டிரா) முதலிடம் பிடித்து தொடர்ந்து 4-வது முறையாக 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ஜமைக்கா 5 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 2 டிரா) 2-வது இடம் பெற்று முதல்முறையாக அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

பிரேசில் 4 புள்ளியுடன் (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 3-வது இடமும், அறிமுக அணியான பனாமா 3 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி கணக்கை தொடங்காமலும் வெளியேறின. பிரேசில் அணி உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுடன் நடையை கட்டுவது 1995-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.

'ஜி' பிரிவில் சுவீடன், தென்ஆப்பிரிக்கா அணிகள் தங்களது கடைசி லீக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றை எட்டின. இன்றுடன் லீக் சுற்று முடிவுக்கு வருகிறது. இன்றைய ஆட்டங்களில் மொராக்கோ-கொலம்பியா, தென்கொரியா-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.


Next Story