உலகக் கோப்பை சாம்பியன் : அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு தங்க ஐபோன்களை பரிசளிக்கும் மெஸ்ஸி..!


உலகக் கோப்பை சாம்பியன் : அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு தங்க ஐபோன்களை பரிசளிக்கும் மெஸ்ஸி..!
x

தனது அணி வீரர்கள் ,பயிற்சியாளர்களுக்குப் 35 பேருக்கு தங்க ஐபோன் பரிசளித்துள்ளார்.

கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து அர்ஜென்டீனா அணி சாம்பியன் ஆனது.

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது.மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது.

உலகக்கோப்பை 2022 தொடரில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அணியின் கேப்டன் மெஸ்ஸி, தனது அணி வீரர்கள் ,பயிற்சியாளர்களுக்குப் 35 பேருக்கு தங்க ஐபோன் பரிசளித்துள்ளார்.

வீரர்களின் பெயர்கள், ஜெர்ஸி எண்கள் மற்றும் அணியுடன் பணியாற்றிய நிர்வாகிகளின் பெயர்களுடன் தங்கத்தால் தனித்துவமாக உருவாக்கப்பட்ட அந்த போன்கள் வீரர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது

மெஸ்ஸி தங்களிடம் 35 போன்களை ஆர்டர் அளித்ததாக, தங்க ஐபோன்களை உருவாக்கும் ஐடிசைன் கோல்ட்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story