சரித்திரம் படைத்த கருண்நாயர்


சரித்திரம் படைத்த கருண்நாயர்
x
தினத்தந்தி 19 Dec 2016 8:46 PM GMT (Updated: 19 Dec 2016 8:46 PM GMT)

* முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய 3–வது வீரர் என்ற பெருமையை தனதாக்கிய கருண்நாயர் 5 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 3–வது இடத்தை பெற்றுள்ளார். குறைந்த இன்னிங்சில் (3–வது டெஸ்டில்) முச்சதம் அடித்து சாதனை படைத்த கருண்

* கர்நாடகா ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் 25 வயதான கருண்நாயர் நேற்று முச்சதம் (ஆட்டம் இழக்காமல் 303 ரன்) அடித்து கிரிக்கெட் உலகின் அனைவரையும் வியக்க வைத்துடன் பல்வேறு சரித்திரங்கள் படைத்தார். டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த 2–வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்திய வீரர்களில் ஷேவாக் மட்டுமே முச்சதம் (இரண்டு முறை) அடித்து இருக்கிறார்.

* முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய 3–வது வீரர் என்ற பெருமையை தனதாக்கிய கருண்நாயர் 5 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 3–வது இடத்தை பெற்றுள்ளார். குறைந்த இன்னிங்சில் (3–வது டெஸ்டில்) முச்சதம் அடித்து சாதனை படைத்த கருண்நாயர் இளம் வயதில் முச்சதம் அடித்தவர்கள் பட்டியலில் 5–வது இடத்தையும் பிடித்துள்ளார்.

* நேற்று ஒரேநாளில் 232 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3–வது இடத்தை பிடித்தார்.

* இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற புகழும் கருண்நாயரின் பெயருடன் இணைந்தது.

* இந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய வீரர் அஸ்வின் 25 விக்கெட்டும், 300 ரன்களுக்கு மேலும் எடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகள் மற்றும் 300 ரன்களை குவித்த 6–வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

* சென்னை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது தான் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் இந்திய அணி குவித்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு 2009–ம் ஆண்டில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்னும் இது தான். முன்பு 2007–ம் ஆண்டில் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 664 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்னும் இதுவாகும். ஏற்கனவே இங்கு 1985–ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 652 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.


Next Story