துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 21 Dec 2016 9:26 PM GMT (Updated: 21 Dec 2016 9:26 PM GMT)

* இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா அளித்த பேட்டியில், ‘இந்திய அணி நல்ல பார்மில் இருக்கிறது. இதனால் வலுவான அணியான இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை எளிதாக வென்றது. விராட்கோலி உத்வேகம் மிக்க நல்ல கேப்டன். அவர் பந்து வீச்சாளர்களை

* அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரியான முன்னாள் நீதிபதி பிபின் சந்திரா கான்ட்பால் மேற்பார்வையில் நடந்த இந்த கூட்டத்தில் 2017–2020–ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. மத்திய விளையாட்டு அமைச்சக பிரதிநிதியாக திலிப்குமார் சிங்கும், இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதியாக குல்தீப் வாட்ஸ்சும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் தலைவராக பிரபுல் பட்டேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பது இது 3–வது முறையாகும். மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

* இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா அளித்த பேட்டியில், ‘இந்திய அணி நல்ல பார்மில் இருக்கிறது. இதனால் வலுவான அணியான இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை எளிதாக வென்றது. விராட்கோலி உத்வேகம் மிக்க நல்ல கேப்டன். அவர் பந்து வீச்சாளர்களை அருமையாக வழிநடத்துகிறார். அவரும் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கருண்நாயர் ஆட்டம் இழக்காமல் 303 ரன்கள் குவித்தது எளிதான காரியம் அல்ல. இதுபோன்ற மைல்கல்லை எட்ட மிகுந்த பொறுமை அவசியமானதாகும். கருண்நாயருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது’ என்று தெரிவித்தார்.

* இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் ஜெய்ப்பூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்திய நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. லோதா கமிட்டி பரிந்துரைகளில் 85 சதவீதத்துக்கு மேல் நாங்கள் அமல்படுத்தி இருக்கிறோம். மூன்று, நான்கு சிபாரிசுகளை அமல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறார்கள். இதனை லோதா கமிட்டியிடம் தெரிவித்ததுடன், எங்களுக்கு கால அவகாசம் தருமாறு கேட்டோம். ஆனால் கடந்த 2 மாதங்களாக எங்களுக்கு லோதா கமிட்டி நேரம் எதுவும் ஒதுக்கி தரவில்லை’ என்று கூறினார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில், ‘அடுத்த ஆண்டில் (2017) வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். அன்னிய மண்ணில் இந்திய அணி சோபிக்காது என்ற முத்திரையை மாற்றி காட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறோம். தற்போது நமது வீரர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். இதனால் தான் நமது அணி களத்தில் சிறப்பாக செயல்பட முடிகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தான் எனது முழு கவனமும் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story