சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து


சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து
x
தினத்தந்தி 28 Jan 2017 11:15 PM GMT (Updated: 28 Jan 2017 7:57 PM GMT)

லக்னோ, சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில்

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-11, 21-19 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியா வீராங்கனை பிட்ரினியை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

சிந்து, இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மற்றொரு இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா மாரிஸ்காவை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-15, 21-11 என்ற நேர்செட்டில் சக நாட்டவர் ஹர்ஷீன் டானியை சாய்த்து இறுதிப்போட்டியை எட்டினார். இன்னொரு அரைஇறுதியில் இந்திய வீரர் சாய் பிரனீத் 15-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் சக நாட்டு முன்னணி வீரர் ஸ்ரீகாந்துக்கு அதிர்ச்சி அளித்தார். இறுதிப்போட்டியில் சாய் பிரனீத்-சமீர் வர்மா மோதுகிறார்கள். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி -சிக்கி ரெட்டி ஜோடியும், கலப்பு இரட்டையரில் சுமீத் ரெட்டி-அஸ்வினி இணையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


Next Story