ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்றார்


ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 13 May 2017 8:00 PM GMT (Updated: 13 May 2017 7:59 PM GMT)

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பிரீஸ்டைல் ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடைப்பிரிவில்

புதுடெல்லி,

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பிரீஸ்டைல் ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 6–2 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் செங்சுல் லீயை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். பெண்களுக்கான 58 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா 0–6 என்ற புள்ளி கணக்கில் கிர்கிஸ்தான் வீராங்கனை அய்சுலுவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான 97 கிலோ உடல் எடைப்பிரிவில் சாக்ஷி மாலிக்கின் கணவர் சத்யவாத் காடியன் தோல்வி கண்டு வெளியேறினார்.


Next Story