ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு உதவி கலெக்டர் பதவி


ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு உதவி கலெக்டர் பதவி
x
தினத்தந்தி 16 May 2017 9:45 PM GMT (Updated: 16 May 2017 8:32 PM GMT)

கடந்த ஆண்டு ரியோடிஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு உதவி கலெக்டர் பதவியை வழங்க ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

அமராவதி,

கடந்த ஆண்டு ரியோடிஜெனீரோவில் (பிரேசில்) நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் போட்டி, போட்டி பரிசுகள் வழங்கின. ஆந்திர அரசு ரூ.3 கோடி ஊக்கத்தொகையும், ஒரு வீடும் வழங்கியது. தற்போது சிந்துவுக்கு நேரடியாக உதவி கலெக்டர் பதவியை வழங்க ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 இதற்காக ஆந்திர பொது தேர்வாணைய விதிமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா ஆந்திர மாநில சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறைவேறியது. 

Next Story