தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சாய் பிரனீத் கால்இறுதிக்கு முன்னேற்றம்


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சாய் பிரனீத் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 1 Jun 2017 9:30 PM GMT (Updated: 1 Jun 2017 8:42 PM GMT)

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது.

பாங்காங்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 21-18 என்ற நேர்செட்டில் இஸ்கந்தர் சுல்கர்னை (மலேசியா) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா 16-21, 25-23, 11-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவெர்டெஸ்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-11, 21-14 என்ற நேர் செட்டில் யிங் யிங் லீயை (மலேசியா) துவம்சம் செய்து கால்இறுதிக்கு முன்னேறினார். 

Next Story