துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 19 Jun 2017 10:15 PM GMT (Updated: 19 Jun 2017 8:49 PM GMT)

* ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது.

போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம், பிரனாய், பிரனீத் ஆகியோரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

* இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார்சிங் மீது கடந்த ஆண்டு இந்தியா வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து ஆக்கி வீராங்கனை ஆஷ்பால் போகல் கற்பழிப்பு புகார் தெரிவித்து இருந்தார். லண்டனில் நடைபெறும் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று ஆட்டத்தில் விளையாடி வரும் சர்தார்சிங்கிடம் இந்த புகார் குறித்து யார்க்ஷைர் போலீசார் நேற்று விசாரணை நடத்தி உள்ளனர். போட்டியின் இடையில் சர்தார்சிங்கை அழைத்து விசாரித்ததற்கு சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் நரிந்தர் பத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

* சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து 12 பேர் கொண்ட சாம்பியன்ஸ் கோப்பை கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்து அறிவித்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த பஹார் ஜமான், ஜுனைட்கான், ஹசன் அலி ஆகியோரும் அந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட்கோலி, ஷிகர் தவான் புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு அந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் அளித்த பேட்டியில், ‘டோனி அருமையான கேப்டன். அவர் உத்வேகம் அளிக்கக்கூடிய தலைவர். ஆனால் விராட்கோலி சிறந்த கேப்டனாக உருவெடுத்து வருகிறார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் கண்ட தோல்வியை வைத்து அவரது திறமையை மதிப்பிடக்கூடாது. அவர் இந்திய அணியை நன்றாக வழிநடத்தி வருகிறார்’ என்று தெரிவித்தார்.

* தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் ஆசிய பசிபிக் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் விஜேந்தர்சிங், தனது அடுத்த போட்டியில் சூப்பர் மிடில் வெயிட் சாம்பியனான சீனாவின் சுல்பிகர் மைமைதியாலியை சந்திக்கிறார். இந்த போட்டி மும்பையில் ஆகஸ்டு மாதம் நடைபெறுகிறது.

* 1992–ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான இம்ரான்கான் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கிரிக்கெட்டில் சூப்பர் பவர் கொண்ட படையாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளங்குகிறது. சூப்பர் பவரையும் விட சிறப்பாக செயல்படகூடிய திறமை வாய்ந்த வீரர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர். லீக் ஆட்டத்தில் கண்ட தோல்வியில் இருந்து மீண்டு இந்திய அணியை வீழ்த்தியது அற்புதமானது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக முறை சரியானதாக இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story