துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 26 Jun 2017 10:30 PM GMT (Updated: 26 Jun 2017 7:22 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1–2 என்ற கணக்கில் இழந்த தென்ஆப்பிரிக்க அணி அடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் 3 புதுமுகங்கள்

இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் வருகிற 6–ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 20 ஓவர் போட்டியில் ஆடிய ஆல்–ரவுண்டர் பெலக்வாயோ முதல் முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்கள் எய்டன் மார்க்ராம், ஹெய்னோ குன் ஆகிய புதுமுகங்களும் இடம் பெற்றுள்ளனர். அணி விவரம் வருமாறு:– அம்லா, பவுமா, டி புருன், குயின்டான் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டுமினி, டீன் எல்கர், ஹெய்னோ குன், கே‌ஷவ் மகராஜ், மார்க்ராம், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், டுனே ஆலிவர், பெலக்வாயோ, பிலாண்டர், ரபடா.

முகநூலில் அதிகம் பேரை கவர்ந்த கோலி

முகநூலில் (பேஸ்புக்) இந்தியர்களில் யாரை அதிகம் பேர் பின்பற்றுகிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளன. இந்த வரிசையில் முதலிடத்தை பிரதமர் நரேந்திர மோடி பெறுகிறார். அவரை 4 கோடியே 22 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவருக்கு அடுத்த இடம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. கோலியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3½ கோடி பேர் ஆகும். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களில் முகநூலில் அதிகம் பேரை ஈர்த்துள்ளவராகவும் கோலி திகழ்கிறார்.

இந்திய பயிற்சியாளர் பதவிக்கு முயற்சியா? ஜெயவர்த்தனே மறுப்பு

கும்பிளே விலகியதையடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டையை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே விண்ணப்பிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை அவர் மறுத்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு எனது பெயரையும் இணைத்து தவறாக யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் இப்போதைக்கு முழு நேர பயிற்சியாளர் ஆகும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

எதிர்காலம் குறித்து முடிவு செய்கிறார், டிவில்லியர்ஸ்

தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் தற்போது ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறார். உடல் ஒத்துழைக்காததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பணியையும் கவனிக்கும் 33 வயதான டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய, ஆகஸ்டு மாதம் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார். டிவில்லியர்ஸ் கூறும் போது, ‘தென்ஆப்பிரிக்க அணிக்காக 2019–ம் ஆண்டு உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது பிரதான கனவு. ஆனால் கிரிக்கெட் வாரியத்துடனான ஆலோசனையின் முடிவை பொறுத்தே எல்லா வி‌ஷயங்களும் அமையும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றார்.


Next Story