துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 19 Aug 2017 9:24 PM GMT (Updated: 19 Aug 2017 9:24 PM GMT)

கனடாவில் நடந்த உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டியில், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய பிரிவில் பங்கேற்று 3 தங்கப்பதக்கம் வென்ற உசிலம்பட்டி வீரர் கணேசனுக்கு

*புரோ கபடி லீக் தொடரில் லக்னோவில் நேற்றிரவு நடந்த ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் 37–32 என்ற புள்ளி கணக்கில் மும்பையையும், அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36–29 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேசத்தையும் தோற்கடித்தன.

*பர்மிங்காமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் 3–வது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 168 ரன்னில் சுருண்டு ‘பாலோ–ஆன்’ ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட், ரோலன்ட் ஜோன்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து ‘பாலோ–ஆன்’ பெற்று 346 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 12 ஓவர் முடிந்திருந்த போது 2 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது.

* கனடாவில் நடந்த உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டியில், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய பிரிவில் பங்கேற்று 3 தங்கப்பதக்கம் வென்ற உசிலம்பட்டி வீரர் கணேசனுக்கு (வயது 36) சொந்த ஊரில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story