புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் திரில் வெற்றி


புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் திரில் வெற்றி
x
தினத்தந்தி 12 Sep 2017 8:56 PM GMT (Updated: 12 Sep 2017 9:11 PM GMT)

12 அணிகள் இடையிலான 5–வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சோனிபேட்,

12 அணிகள் இடையிலான 5–வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சோனிபேட்டில் நேற்றிரவு நடந்த 73–வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி (பி பிரிவு) 32–31 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்தது. கடைசி நேரத்தில் ரைடுக்கு சென்று வெற்றிக்குரிய புள்ளியை எடுத்த பெங்கால் வாரியர்ஸ் வீரர் ஜாங் குன் லீ மொத்தம் 9 புள்ளிகளை சேகரித்து அசத்தினார். 15–வது லீக்கில் ஆடிய பெங்கால் வாரியர்சுக்கு இது 7–வது வெற்றியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் உள்ளூர் அணியான அரியானா ஸ்டீலர்ஸ் (ஏ பிரிவு) 27–24 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்து 7–வது வெற்றியை பதிவு செய்தது.

இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்– உத்தரபிரதேச யோத்தா (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்–புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story