பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் பட்டம் வென்று அசத்தல்


பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் பட்டம் வென்று அசத்தல்
x
தினத்தந்தி 29 Oct 2017 8:30 PM GMT (Updated: 29 Oct 2017 7:15 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–14, 21–13 என்ற நேர் செட்டில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோட்டாவை வீழ்த்தி மகுடம் சூடினார். இந்த பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார். வெறும் 34 நிமிடங்களில் வெற்றியை ருசித்த ஸ்ரீகாந்த் இந்த ஆண்டில் பெற்ற 4–வது சூப்பர் சீரிஸ் பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஒரு சீசனில் நான்கு மற்றும் அதற்கு மேல் சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற 4–வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே சீனாவின் லின் டான், சென் லாங், மலேசியாவின் லீ சோங் வெய் ஆகியோர் இச்சாதனையை படைத்திருக்கிறார்கள்.


Next Story