பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் இன்று தொடங்குகிறது.
* விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் இன்று தொடங்குகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் குஜராத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை பச்சையப்பா கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.


* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்துக்கான புதுப்பிப்பு கட்டணம் செலுத்தாததால் நேற்று முதல் முடக்கப்பட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணையதளம் இயங்காது என்று தெரிகிறது.

* இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போட்டி எதிலும் பங்கேற்கவில்லை. கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து சானியா மிர்சா அளித்த ஒரு பேட்டியில், ‘காயம் குணமடைய மேலும் சில மாதங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஆபரே‌ஷன் செய்தால் காயம் நன்றாகும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதால் ஓய்வு எடுத்து காயத்தை சரி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறேன்’ என்று தெரிவித்தார்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு கோவாவில் நடந்த 64–வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா–நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா அணியில் மான்டர் ராவ் தேசாய் 42–வது நிமிடத்திலும், பெர்ரான் கோரோமினாஸ் 53–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணி தரப்பில் மார்சின்ஹோ 45–வது நிமிடத்திலும், ஜான் மாஸ்குரா 71–வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 5–ந் தேதி முதல் பிப்ரவரி 1–ந் தேதி வரை நடக்கிறது.
2. துளிகள்
‘இந்தியா– ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துபவர் புஜாரா தான்.
3. துளிகள்
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மிசோரம்-மேகாலயா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மேகாலயாவில் உள்ள ஷில்லாங் நகரில் நடந்தது.
4. து ளி க ள்
பெண்களுக்கான பிக்பாஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நேற்று நடந்த 21–வது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்–பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.
5. து ளி க ள்
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் பெங்களூரு எப்.சி.–மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.