பிற விளையாட்டு

குளிர் கால ஒலிம்பிக் போட்டி: நிறைவு விழாவில் வடகொரியாவின் மூத்த அதிகாரி கலந்து கொள்கிறார் + "||" + Top North Korean general to attend Olympic closing: Seoul

குளிர் கால ஒலிம்பிக் போட்டி: நிறைவு விழாவில் வடகொரியாவின் மூத்த அதிகாரி கலந்து கொள்கிறார்

குளிர் கால ஒலிம்பிக் போட்டி: நிறைவு விழாவில் வடகொரியாவின் மூத்த அதிகாரி கலந்து கொள்கிறார்
தென்கொரியாவில் நடைபெறும் குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் வடகொரியாவின் மூத்த ராணுவ அதிகாரி கலந்து கொள்கிறார்.
சியோல், 


23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. குளிர் கால ஒலிம்பிக் போட்டி தொடரில் வடகொரியாவும் கலந்து கொண்டது. குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், வடகொரியா அதிபரின் சகோதரி ஜிம் யோ ஜோங்  கலந்து கொண்டார். ஏறக்குறைய இரண்டு வார காலம் நடைபெற்ற இந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் இந்த வார இறுதியில் முடிவு பெறுகின்றன. 

குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில், வடகொரியாவின் மூத்த ராணுவ அதிகாரி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஆளும்  கட்சியின் மூத்த பொறுப்பையும் வகிக்கும் கிம்யோங் ஷோல், எட்டு பேர் கொண்ட வடகொரிய குழுவுக்கு நிறைவு விழாவில் தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.