துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 31 March 2018 8:28 PM GMT (Updated: 31 March 2018 8:28 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல்தடுப்பு பிரிவின் தலைவராக நீரஜ்குமாருக்கு பதிலாக ராஜஸ்தான் மாநில முன்னாள் டி.ஜி.பி. அஜித் சிங்கை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று நியமித்தது.

*7 வார காலம் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் குறிப்பிடத்தக்க 50 இந்திய வீரர்களின் பணிச்சுமையை கண்காணிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த 50 வீரர்களில் 27 பேர் தற்போது ஒப்பந்த பட்டியலில் இருப்பவர்கள் ஆவர். ஒவ்வொரு வீரர்களும் போதிய அளவுக்கு ஓய்வு பெற்று, முழு உடல்தகுதியுடனும், புத்துணர்ச்சியுடனும் களம் காண வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நோக்கமாகும்.

*இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல்தடுப்பு பிரிவின் தலைவராக நீரஜ்குமாருக்கு பதிலாக ராஜஸ்தான் மாநில முன்னாள் டி.ஜி.பி. அஜித் சிங்கை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று நியமித்தது. டெல்லி முன்னாள் போலீஸ் கமி‌ஷனரான நீரஜ்குமார், இதற்கான ஆலோசகராக மே 31–ந்தேதி வரை நீடிப்பார்.

*காமன்வெல்த் விளையாட்டு போட்டி வருகிற 4–ந்தேதி முதல் 15–ந்தேதி வரை ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடக்கிறது. வீரர்களுக்கான விளையாட்டு கிராமத்தில் இந்திய வீரர்கள் சிலர் தங்கியிருந்த அறையின் அருகே ஊசிகள் கிடந்தது சலசலப்பை கிளப்பி உள்ளது. ஊசி மூலம் ஊக்கமருந்தை யாராவது பயன்படுத்தினார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவற்றை யார் அங்கு போட்டது என்பது தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தாங்கள் எந்தவித தவறும் செய்யவில்லை என்று இந்திய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணி நேற்று புறப்பட்டு சென்றது. அணியில் சவுரவ் கோ‌ஷல், ஹரிந்தர் பால் சந்து, விக்ரம் மல்கோத்ரா, ரமித் தாண்டன், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

*ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘சென்னை ரசிகர்கள், கிரிக்கெட்டை நன்கு அறிந்தவர்கள், புரிந்தவர்கள். நல்ல கிரிக்கெட் வீரர்களை பாராட்டக்கூடியவர்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு வியப்புக்குரிய வகையில் இருக்கிறது. அவர்களின் உற்சாகம் எங்களை பரவசப்படுத்துகிறது’ என்று கூறியுள்ளார்.


Next Story