ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய வீரர்கள் தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய வீரர்கள் தோல்வி
x
தினத்தந்தி 11 May 2018 9:00 PM GMT (Updated: 11 May 2018 8:23 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 14–21, 6–21 என்ற நேர்செட்டில் சீனா வீரர் லூ குவான்சூவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

சிட்னி, 

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 14–21, 6–21 என்ற நேர்செட்டில் சீனா வீரர் லூ குவான்சூவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21–23, 13–21 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் லீ செக் யூவிடம் தோல்வி அடைந்து நடையை கட்டினார். இந்த ஆட்டம் 42 நிமிடம் நீடித்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனு அட்ரி–சுமீத் ரெட்டி ஜோடி 17–21, 21–19, 21–18 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த அர்ஜூன்–ராம்சந்திரன் ஷ்லோக் இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.


Next Story