பிற விளையாட்டு

தென் கொரிய முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகல் + "||" + South Korean swimmer Park pulls out of Asian Games

தென் கொரிய முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகல்

தென் கொரிய முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகல்
தென் கொரியாவின் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் போட்டி சாம்பியனான பார்க் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

சியோல்,

தென் கொரியாவை சேர்ந்த நீச்சல் வீரர் பார்க் தே-ஹ்வான் (வயது 28).  கடந்த 2006ம் ஆண்டு தோஹாவிலும் மற்றும் 2010ம் ஆண்டில் குவாங்ஜூவிலும் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 6 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் ஊக்க மருந்திற்காக இவருக்கு 18 மாத தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து 2014ம் ஆண்டில் இவர் பெற்ற ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் பறிக்கப்பட்டன.  இந்நிலையில் இந்தோனேஷியாவில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2ந்தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்கும் அணியில் அவர் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

எனினும், போட்டியில் இருந்து அவர் விலகி உள்ளார் என அவரது அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. போதிய அளவில் நன்றாக நீச்சல் அடிக்கவில்லை.  இதனால் நான் ஓய்வு பெறுகிறேன் என கூறுவதற்கு பதில், எனது வருங்காலம் பற்றி சிந்திக்க சில காலம் எடுத்து கொள்ளலாம் என்றிருக்கிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...