துபாயில் நடந்த மாஸ்டர்ஸ் கபடி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது


துபாயில் நடந்த மாஸ்டர்ஸ் கபடி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது
x
தினத்தந்தி 30 Jun 2018 4:12 PM GMT (Updated: 30 Jun 2018 4:12 PM GMT)

துபாயில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கபடி தொடரின் இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தினை வென்றது.

துபாயில் கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன. 

இதில் லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இதில் முதலாவதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஈரான் அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  அடுத்து இரண்டாவதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து இன்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்கொரியா அணிகள் மோதின.  இதில், 44-26 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி ஈரானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றது.


Next Story