ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...


ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...
x
தினத்தந்தி 18 Aug 2018 9:00 PM GMT (Updated: 18 Aug 2018 7:21 PM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:–

காலை 6.30 மணி: துப்பாக்கி சுடுதலில் டிராப் பிரிவு ஆண்கள் தகுதி சுற்று (லக்‌ஷய், மனவ்ஜித்சிங் சந்து).

காலை 7.30 மணி: துப்பாக்கி சுடுதலில் டிராப் பிரிவு பெண்கள் தகுதி சுற்று (ஸ்ரேயாசி சிங், சீமா தோமர்).

காலை 7.30 மணி: கபடி பெண்கள் பிரிவின் லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா–ஜப்பான் மோதல்.

காலை 8 மணி: டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் (பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன், ராம்குமார்).

,, டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் (அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர் தான்டி).

,, டென்னிஸ் கலப்பு இரட்டையர் முதல் சுற்று ஆட்டம் (ரோகன் போபண்ணா–அங்கிதா ரெய்னா, திவிஜ் சரண்–கர்மான் கவுர் தான்டி).

காலை 8 மணி: துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் தகுதி சுற்று (ரவிகுமார், அபூர்வா சண்டிலா), இறுதிப்போட்டி (பகல் 12 மணி).

காலை 8 மணி: நீச்சலில் ஆண்களுக்கான தகுதி சுற்று பந்தயம் (200 மீட்டர் பிரீஸ்டைல், சவுரப் சாங்வேகர்), (200 மீட்டர் பட்டர்பிளை, சாஜன் பிரகாஷ்), (100 மீட்டர் பேக்ஸ்டிரோக், சந்தீப் சேஜ்வால்).

காலை 9 மணி: கூடைப்பந்து (பைவ்ஸ்) பெண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா–சீன தைபே மோதல்.

காலை 9 மணி: கைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா–தென் கொரியா சந்திப்பு.

காலை 9.30 மணி: செபக்தக்ரா (ரெகு) போட்டியில் பெண்கள் பிரிவு லீக் சுற்றில் இந்தியா–தென்கொரியா பலப்பரீட்சை.

காலை 10 மணி: துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று (அபிஷேக் வர்மா, மானு பாகெர்), இறுதிப்போட்டி (பிற்பகல் 3.20 மணி).

பகல் 12 மணி: மல்யுத்தத்தில் ஆண்கள் பிரிவு பிரீஸ்டைல் பந்தயம் (57 கிலோ–சந்தீப் தோமர், 65 கிலோ–பஜ்ரங் பூனியா, 74 கிலோ–சுஷில்குமார், 86 கிலோ–பவன்குமார், 97 கிலோ–மவ்சம் காத்ரி), இறுதிப்போட்டி (மாலை 6 மணி).

பிற்பகல் 3 மணி: ஹேண்ட்பால் போட்டியின் பெண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா–சீனா மோதல்.

மாலை 5.30 மணி: கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் லீக் சுற்றில் இந்தியா–இலங்கை.

இரவு 7 மணி: ஆக்கி போட்டியில் பெண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா–இந்தோனேஷியா மோதல்.

(நேரடி ஒளிபரப்பு: சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென் 2 சேனல்)


Next Story