பிற விளையாட்டு

ஹிமா தாசுக்கு கவுரவம் + "||" + Hema Dasu is the honor

ஹிமா தாசுக்கு கவுரவம்

ஹிமா தாசுக்கு கவுரவம்
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாசுக்கு கவுரவம் அளிக்கப்பட்டது.


ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம், 2 வெள்ளி வென்று பிரமிக்க வைத்த இந்திய இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் சொந்த ஊரான அசாம் மாநிலம் கவுகாத்திக்கு நேற்று திரும்பினார். காரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலையில் நடந்த பாராட்டு விழாவில் அவருக்கு ரூ.1.6 கோடி ஊக்கத்தொகையை வழங்கிய அம்மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால், அசாம் மாநிலத்தின் விளையாட்டு தூதுவராகவும் அவரை நியமித்தார். முன்னதாக விழாவில் அவருக்கு சர்பானந்தா சோனாவால் பாரம்பரிய தலைப்பாகையை அணிவித்த போது எடுத்த படம்.