பிற விளையாட்டு

இளையோர் ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார் + "||" + Saurabh Chaudhary shoots down gold in Youth Olympics

இளையோர் ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்

இளையோர் ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்
இளையோர் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவுரப் சவுத்ரி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

பியூனஸ்அயர்ஸ்,

அர்ஜென்டினா நாட்டில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி 244.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

தென்கொரியாவின் சங் யன்ஹோ 236.7 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், சுவிட்சர்லாந்தின் சோலாரி ஜேசன் 215.6 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.

உத்தர பிரதேசத்தின் மீரட் நகர் அருகே கலீனா கிராமத்தினை சேர்ந்த 16 வயது நிறைந்த சவுரப் ஆசிய போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றவர்.  இன்று நடந்த போட்டியில் மொத்தம் 580 புள்ளிகள் பெற்று தகுதி சுற்றில் முதலிடத்தினை பெற்றார்.