புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 5-வது தோல்வி


புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 5-வது தோல்வி
x
தினத்தந்தி 17 Oct 2018 10:00 PM GMT (Updated: 17 Oct 2018 7:08 PM GMT)

புரோ கபடி போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 5-வது தோல்வியை சந்தித்தது.

சோனிபட்,

6-வது புரோ கபடி லீக் தொடரில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நேற்றிரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி 44-35 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை தோற்கடித்தது. 6-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8 மணி), புனேரி பால்டன்-குஜராத் பார்ச்சுன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story